மைனா-அனைவரும் பார்க்க வேண்டிய படம்


தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படம் வந்திருந்தாலும், இதுவரை யாரும் கானாத திரைக்கண்னோட்டம் தான் இந்த மைனா திரைப்படம், இந்தப்படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு, இதுவும் சாதாரண ஒரு கிராமத்து திரைப்படம் என்றுதான் நினைத்தேன், ஆனால் நேற்று திரைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது, இந்தப்படத்தின் விமர்சனம் அனைத்தும் உண்மை என்று, படத்தில் சாதாரண காட்சி என்றாலே ஹீரோயின் மேக்அப் இல்லாமல் நடிக்கமாட்டார்கள் ஆனால் இந்தப்படத்தில் முழுக்கவே ஹீரோயினுக்கு மேக்அப் என்பதே இருப்பதாக தெரியவில்லை,  இந்தப்படம் முழுவதும் தேனி மாவட்டத்தில் படமாகப்பட்டது ஆகும்.


இதில் போலிஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையாவின் வருகைக்கு பிறகுதான் படம் போக்கே மாறுகிறது, அதுவும் அவர் குற்றவாளியை விலங்கிட்டு மலைகளில் நடந்துசெல்லும் போதும், வழிமாறி சரியான பாதையை தேர்வு செய்யும் போதும் அவர் செய்யும் லூட்டியால்  அரங்கமே அலருகிறது.

இது ஒருகாதல் கதையாக இருந்தாலும் இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே நினைவிலேயே நிற்கிறனர். ஹீரோ படம் முழுவதும் வலம் வந்தாலும் அவர் பெரிதாக சொலிக்கவில்லை, ஆனால் ஹீரோயில் இந்தப்படத்தில் அதிகம் பேசவில்லை ஆனால் அவருடைய அழகை கேமராக்கள் படம்பிடித்த விதம் இன்னொரு அழகு. ஹீரோயினுடைய பருக்களை கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் கேமராமேன். சிறுவயதில் இருந்தே மைனாவை (ஹீரோயின்) உயிராக நினைக்கும் ஹீரோ தன்னுடைய பாதுக்காப்பிலேயே வளரும் அந்த ஹீரோயினையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார், ஆனால் ஹீரோயினுடைய அம்மா இதை மறுக்கிறார், இதனால் கோபப்படும் ஹீரோ, ஹீரோயினுடைய அம்மாவிடம் சண்டையிடுகிறார். அதனால் ஹீரோ போலீசாரால் கைதுசெய்யப்பட்டு 15 நாட்கள்  சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்கிடையில் ஹீரோயினுடைய அம்மா ஹீரோயினுக்கு திருமணம் செய்ய முயல்கிறார்.



இதை அறிந்த ஹீரோ சிறையிலிருந்து தப்பி ஹீரோயினை பார்க்க வருகிறார், ஆனால் ஹீரோயினுடைய அம்மா இதை எதிர்க்க நாயகனுக்கும் ஹீரோயினுடைய அம்மாவுக்கும் சண்டை ஏற்படுகிறது, இதற்கிடையில் தப்பிய கைதியை தேடி இன்ஸ்பெக்ட்டரும், ஜெயில் வாடனும் வருகிறனர். சண்டையில் இருந்து ஹீரோவையும், ஹீரோயினையும் அழைத்துச்செல்லும் போது வழிமாறி மூணாரு சென்றுவிடுகிறனர். பின் அங்கிருந்து வரும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது, அந்த ஒரு காட்சியே பல ஹாலிவுட் படங்களுக்கு சமர்ப்பனம்.

பின் ஒருவழியாக போலிஸ் அதிகாரியும் ஹீரோவும் நண்பர்கள் ஆகிறனர், அன்று இரவு அதாவது தீபாவளி அன்று  ஹீரோயினை அழைத்துகொண்டு போலிஸ் அதிகாரி தனது வீட்டுக்கு வருகிறார் ஆனால் அவரது மனைவியோ சந்தேகபடுகிறாள். இதனால் கோபபடும் போலிஸ் அதிகாரி தனது மனைவிடம் சண்டையிடுகிறார் இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் அந்த பெண் தனது அண்ணன்களிடம் கூறி, ஹீரோயினை அவர்கள் கொடுமைப்படுத்தி கொன்றுவிடுவார்கள், இதனை அறிந்த ஹீரோவும் இறந்துவிடுவார், பின் அவர்களை அந்த போலிஸ் அதிகாரி கொன்று விடுவார்.

டைரக்டர் பிரபு சாலமனை பாராட்டியே ஆக வேண்டும், ஒரு சிறு விபத்தை கூட கனகச்சிதமாக படமாக்கி இருப்பார், மைனா திரைப்படக்குழு இதுவரை தமிழ் சினிமா காணாத இடங்களுக்கு சென்று திரைக்கதையை படமாக்கி இருப்பார்கள், பாடல்கள் அனைத்தும் அருமை மைனா, மைனா மெலோடி தாளம் போட வைக்கிறது, பஸ்சில் வரும் பாட்டு கும்மாகுத்து. இசை ஒரளவு துணை நிற்கிறது. ஒளிப்பதிவு ஹீரோயினை எவ்வளவு அழகாக காட்ட வேண்டுமோ அந்த அளவு அருமையாக படமாக்கி இருப்பார் ஒளிப்பதிவாளர். மலைக்காடுகளை கண்முன்னே கொண்டுவரும் ஒளிப்பதிவாளருக்கு சல்யூட்.

லவ் பண்ணுங்க சார்.. 
லைஃப் நல்லா இருக்கும்...


மைனா அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.
First

2 comments

Write comments
March 17, 2011 at 5:15 AM delete

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Reply
avatar
Unknown
AUTHOR
March 29, 2011 at 9:53 PM delete

ஒண்ணும் பெருசா சாதிக்கலேன்னு சொல்லியே இந்தப்போடு போடுரீங்களே அப்ப பெரிசா சாதிச்சா என்ன போடு போடுவீங்க

Reply
avatar